உலகில், தினசரி மூன்றரை லட்சம் கொரோனா தொற்றை கடந்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 3 லட்சத்து 52 ஆயிரத்து 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பும் 2 ஆயிரத்து 812ஆக அதிகரித்துள்ளது. அதே நேரம் இரண்டு லட்சத்து 19 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் குணமாகி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 13 ஆயிரத்து 658 ஆக உள்ளது. மொத்த உயிரிழப்பு ஒரு லட்சத்து 95 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுவரை 14 கோடியே 19 லட்சத்து 11 ஆயிரத்து 223 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.