மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய வேட்பாளர் காஜல் சின்ஹா கொரோனா தொற்றினால் உயிரிழந்தார்.
அம்மாநிலத்தில் இன்று 7ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் கார்தா தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் காஜல் சின்ஹா என்பவருக்கு கடந்த பெருந்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. ஆயினும் சிகிச்சை பலனின்றி காஜல் சின்ஹா உயிரிழந்தார்.
காஜல் சின்ஹாவின் மறைவு தமக்கு பெரும் அதிர்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.