மகாராஷ்டிராவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு வழங்குவதற்காக குஜராத்தில் இருந்து ஆக்ஸிஜன் டேங்கர்கள் ரயில் மூலம் கொண்டு செல்லப்பட்டன.
கொரோனா இரண்டாவது அலை காரணமாக மகாராஷ்டிராவில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சையளிக்க ரிலையன்ஸ் நிறுவனம் 3 ஆக்ஸிஜன் டேங்கர்களை வழங்கியது.
ஒவ்வொன்றும் 44 டன் எடை கொண்ட இந்த டேங்கர்கள் குஜராத்தின் ஜாம்நகரில் இருந்து மகாராஷ்டிராவின் கலாம்போலி என்ற இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
ஆக்ஸிஜன் ரயில் 860 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்து இன்று மகாராஷ்டிரா வரும் எனக் கூறப்படுகிறது.