இந்தியாவில் கொரோனா நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரை ஏன் தொடர்ந்து நடத்த வேண்டும் என ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில், குறிப்பிட்டுள்ள அவர், “இந்தியர்களுக்காக தாம் பிரார்த்திப்பதாகவும், கொரோனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகுந்த பயத்தை ஏற்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் பொருத்தமற்றது இல்லையா? என்றும், மக்களைத் தொற்றில் இருந்து திசைதிருப்பவே போட்டிகள் நடத்தப்படுகிறதா? என்றும் ஆடம் கில்கிறிஸ்ட் வினவியுள்ளார்.