மகாராஷ்டிராவில் ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்பதற்கு முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்தை அதிக விலைக்கு விற்க சிலர் திட்டமிட்டுள்ளதாக புனேவில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அவர்கள் போலீசாருடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது காத்கி பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்ற இளம்பெண்ணை பிடித்து விசாரித்த போது, அவரிடம் சில குப்பிகள் ரெம்டெசிவர் இருப்பது தெரியவந்தது.
சில நூறு ரூபாய்களுக்கு வாங்கப்படும் இந்த மருந்து கள்ளச்சந்தையில் 37 ஆயிரதம் ருபாய்க்கு விற்பனையாவதாக தெரியவந்தது. அந்தப் பெண்ணைத் தொடர்ந்து அவருடன் இருந்த மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.