புதுச்சேரியில் இன்றும், நாளையும், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்தது.
மருந்தகங்கள், மளிகைக்கடைகள், பழம் மற்றும் காய்கறி கடைகள், பால் பூத், பால் பொருட்கள் விற்பனையகம், கறி மற்றும் மீன் கடைகள், செய்தித்தாள் விநியோகம் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
குறைவான எண்ணிக்கையில் உள்ளூர் பேருந்துகளை இயக்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்கள்களை அருகில் உள்ள கடைகளில் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், முகக்கவசமின்றி வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கடைவீதிகளான நேருவீதி, காந்திவீதி, அண்ணா சாலை , புதிய பேருந்து நிலையம் ஆகியவை வெறிச்சோடி காணப்பட்டது.