கேரள மாநிலத்தில் சனி, ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களுக்கு கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.
அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகளுக்கு மட்டும் போக்குவரத்து அனுமதிக்கப்படும் என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருமண நிகழ்ச்சிகளில் 75 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இறுதிச்சடங்கில் 50 பேருக்கு மேல் கலந்துக் கொள்ளக் கூடாது என்றும் கேரள அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் கேரளத்தில் 28 ஆயிரத்து 447 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழந்துவிட்டனர்.