ஒடிசா மாநிலம் கலஹண்டி எனுமிடத்தில் நக்சலைட்டுகளைத் தேடி பாதுகாப்பு படையினர் அதிரடி வேட்டையைத் தொடங்கிய நிலையில் ஒரு பெண் நக்சலைட்டின் சடலம் வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
உளவுத்துறை தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் பதுங்கிய நக்சலைட்டுகளுக்கு எதிராக காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரண் அடையும் படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் நக்சலைட்டுகள் சரண் அடையாமல் காவல்துறையினருடன் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சண்டை நிறுத்தப்பட்ட இடைவெளியில் ஒரு பெண் மாவோயிஸ்ட்டின் சடலம் சீருடை அணிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இந்த சண்டையில் குறைந்தது மூன்று நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.