இந்தியாவில் ஆக்சிஜனை விரைவாக கொண்டு செல்வதற்கு மத்தியஅரசு விமானப்படையின் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி வருகிறது.
இரண்டு விமானப்படை விமானங்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதனையடுத்து வெளிநாடுகளில் இருந்தும் ஆக்சிஜனை கொண்டு வருவதற்காகவும் இந்திய விமானப்படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜெர்மனி, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இந்தியாவுக்கு ஆக்சிஜன் சிலிண்டர்களை அளிக்க முன்வந்திருப்பதையடுத்து ஆக்சிஜன் கண்டெய்னர்களை கொண்டு வருவதற்காக விமானப்படை தயாராகி வருகிறது.
ஜெர்மனியின் 23 நடமாடும் ஆக்சிஜன் தயாரிப்பு ஆலைகள் உற்பத்தி விமானம் மூலம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த நிறுவனம் நிமிடத்திற்கு 40 லிட்டர் வீதம் மணிக்கு 2400 லிட்டர் திரவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடியது. இதனிடையே ராணுவ முப்படைகளும் மருத்துவ உபகரணங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு நிதியைப் பயன்படுத்தலாம் என்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார்.இதே போல் ராணுவ மருத்துவர்களையும் கொரோனா சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.