சைடஸ் காடில்லா மருந்து நிறுவனத்தின் விராஃபின் என்ற மருந்தை மிதமான பாதிப்புடைய கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்குப் பயன்படுத்தலாம் என்று இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதியளித்துள்ளது.
இதன் ஒரேயொரு டோஸ் மட்டும் போட்டுக் கொண்ட 91 சதவீத கோவிட் நோயாளிகள் ஏழு நாட்களுக்குள் குணமடைவதாக ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு பல மணி நேரம் ஆக்சிஜன் தேவையை குறைப்பதாகவும் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் இவை மருந்துக் கடைகளிலும் மருத்துவமனைகளிலும் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று விராஃபின் மருந்தை தயாரிக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.