ஜெர்மனியில் இருந்து, நடமாடும் ஆக்சிஜன் ஆலைகளை இந்திய ராணுவம் இறக்குமதி செய்கிறது.
ராணுவத்தின் ஆயுதப் படைகள் மருத்துசேவைப் பிரிவு, ஜெர்மனியில் இருந்து 23 நடமாடும் ஆக்சிஜன் ஆலைகளை கொள்முதல் செய்துள்ளதாகவும், அவை ஒரு வாரத்தில் இந்தியா வந்து சேரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
20 முதல் 25 நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில், ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 400 லிட்டர் ஆக்சிஜன் தயாரிக்கும் இந்த கருவிகளை, எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் சென்று பயன்படுத்தலாம்.
ஜெர்மனியில் இருந்து வந்திறங்க உள்ள இந்த நடமாடும் ஆக்சிஜன் ஆலைகள், ராணுவ மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட உள்ளன. கொரோனா இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரிவுகள், போர்க்கால அடிப்படையில் செயலாற்ற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.