ராஜஸ்தானில் சுமார் 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குடும்பத்தில் பிறந்த பெண் குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்து அந்த குடும்பம் கொண்டாடிய நிகழ்வு அரங்கேறியுள்ளது.
நகார் மாவட்டத்தைச் சேர்ந்த ஹனுமான் - சுக்கி தேவி தம்பதிக்கு கடந்த மாதம் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 35 ஆண்டுகள் கழித்து அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறந்ததால், மகப்பேறுகாலம் முடிந்து கணவர் வீட்டுக்கு வந்த சுக்கி தேவியை குழந்தையுடன் தனி ஹெலிகாப்டரில் வைத்து அழைத்து வந்ததோடு, ஊரே ஒன்றாக கூடி வரவேற்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுமார் நான்கரை லட்சம் ரூபாய் செலவு செய்து குழந்தையை ஹெலிகாப்டரில் வைத்து அழைத்து வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.