கொரோனா தொற்றைத் தடுக்க முகக்கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசிகள் ஆகிய மூன்றையுமே நம்ப வேண்டும் எனத் தேசியத் தொற்றுநோய் மைய அறிவியலாளர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கொரோனா வைரசைவிடத் தாங்கள் புத்திசாலி என மக்கள் நினைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். நோய் எதிர்ப்பாற்றலைத் தரும் உணவுகள், பானங்கள், சத்து மாவுகள் எனக் கொரோனாவை முறியடிக்கப் பரிந்துரைத்த வழிகள் அனைத்தும் தோல்வியடைந்து விட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அறிவியல் அடிப்படையிலான முகக் கவசம், சமூக இடைவெளி, தடுப்பூசி ஆகியவற்றையே நம்ப வேண்டும் என்றும் பிரப்தீப் கவுர் பதிவிட்டுள்ளார். இவர் தமிழக அரசின் சிறப்பு வல்லுநர் குழுவிலும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது.