மேற்கு வங்கத்தின் 43 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இன்று ஆறாம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தியா வங்காளதேசம் எல்லையை ஒட்டிய பல்வேறு மாவட்டங்களில் உள்ள 43 தொகுதிகளில் இன்று ஆறாம்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மத்துவா இன வாக்காளர்கள் அதிகமாக உள்ள இத்தொகுதிகளில் இந்துக்களின் ஓட்டுகளைப் பெறுவதில் பாஜக-திரிணாமூல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நீடிக்கிறது. இதனால் பல வாக்குச்சாவடிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இதனால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.துணை ராணுவப் படைகள் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நாட்டு வெடிகுண்டு வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்களில் ஒருவர் உயிரிழந்தார். பலர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனிடையே எஞ்சிய மூன்று கட்டத் தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்ற திரிணாமூல் காங்கிரசின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் மீண்டும் நிராகரித்துள்ளது.