இந்தியாவில் அடுத்தடுத்து மூன்று முறை உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டின் பெருந்தொற்றுக்கு எதிரான போருக்கு, பெருந்தடங்கலாக மாறக்கூடும் என, மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
கொரோனா ஸ்பைக் புரோட்டீன் உட்பட வைரசின் மூன்று பாகங்கள் உருமாற்றம் அடைந்திருப்பதாகவும், இதனால் தொற்று பரவலின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் மருத்துவ அறிவியலாளர்கள் கணித்திருக்கின்றனர்.
மும்முறை உருமாறிய இந்திய கொரோனா வைரசின் தாக்கம், மகாராஷ்டிரா, டெல்லி, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.
மும்முறை உருமாறிய இந்திய கொரோனா வைரஸ், குறுகிய காலத்தில் வேகமாக பரவி, அதிகம் பேரை பாதிக்கக்கூடும் என மருத்துவ அறிவியலாளர்கள் அஞ்சுகின்றனர்.