மகாராஷ்டிரத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்றிரவு அறிவிப்பு வெளியிட உள்ளதாகக் கூறப்படுகிறது.
மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதை முறியடிக்கும் வகையில் 2 வார முழு ஊரடங்கை நடைமுறைப்படுத்த முதலமைச்சரிடம் அமைச்சரவை கேட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் உத்தவ் தாக்கரே இன்றிரவு 8 மணிக்கு அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.