இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக நேற்று ஒரே நாளில் 2 லட்சத்து 94 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது உலகளவில் இதுவரை இல்லாத 2வது அதிகபட்ச எண்ணிக்கையாகும். பெருந்தொற்று ஏற்பட்ட பின் முதன்முறையாக இறப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்தாலும், எந்த நாட்டிலும் இதுவரை பதிவு செய்யப்படாத 2 வது அளவாக தற்போது இந்த எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா முதல் அலையில் 98 ஆயிரத்து 795 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதை விட தற்போதைய பாதிப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி அமெரிக்காவில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 570 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதே உலகில் உச்சபட்ச அளவாக உள்ளது.
இந்தியாவில் தற்போது பெருந்தொற்றின் வேகம் 19 விழுக்காடாக உள்ளதால் ஒரு நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, விரைவில் 3 லட்சத்தைக் கடக்கும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.