நாடு முழுவதும் 23 சதவீத கொரோனா தடுப்பூசி மருந்து வீணாகியுள்ள நிலையில் தமிழகத்தில் அதிகபட்ச மருந்து வீணாகியுள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பதில் மூலம் தெரியவந்துள்ளது.
ஏப்ரல் 11 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட 10 கோடியே 34 லட்சம் டோஸ்களில், 44 லட்சத்து 78 ஆயிரம் டோஸ் மருந்துகள் வீணாகி இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு, பஞ்சாப், ஹரியானா, மணிப்பூர் மற்றும் தெலங்கானாவில் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வீணாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் ஒரு சதவீதம் கூட தடுப்பூசி மருந்துகள் வீணாக வில்லை.