கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் அச்சத்தை தவிர்க்க பாதுகாப்பு கவச உடையுடன் நடனமாடி உற்சாகமூட்டும் மருத்துவர்களின் வீடியோ இணையத்தில் வைரலானது.
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் நாளொன்றின் பாதிப்பு எண்ணிக்கை இரண்டரை லட்சத்தை தாண்டி பதிவாகி வருகிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து வருவதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிகிச்சை மையங்கள் நிரம்பி வருகின்றன.
ஏற்கெனவே அதிகளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து களைத்து போன மருத்துவர்களுக்கும், மருத்துவமனை ஊழியர்களுக்கும் வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையால் மேலும் சோர்வை அளித்துள்ளது என்றே கூறலாம். இருப்பினும், தங்களது சேவையை தொடர்ந்து செய்துவரும் மருத்துவர்களும், சுகாதாரத்துறை ஊழியர்களும் கொரோனா வாரியர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
மணிக்கணக்கில் கவச உடையை அணிந்துக் கொண்டு கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தாலும், வைரஸ் தொற்றினால் தனிமைப்படுத்தப்படுவதாலும், உடல்சோர்வு, அச்சம் உள்ளிட்ட காரணங்களினாலும் பாதிக்கப்பட்டவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை உற்சாகமூட்ட மருத்துவர்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
குஜராத் மாநிலம் வதோதரா (Vadodara)வில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிலர் அனுமதிக்கப்பட்டிருக்க அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உறவினர்கள் இன்றி தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோயாளிகளின் அச்சத்தை போக்கும் விதமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் நடனமாடினர்.
பாடலுக்கு ஏற்றவாறு மருத்துவர்கள் நடனமாட அவர்களுடன் இணைந்து அமர்ந்தப்படியும், படுத்தத்திருந்தபடியும் இருந்த நோயாளிகளும் நடனமாடினர். 1990ம் ஆண்டு சன்னி டியோல் நடிப்பில் வெளிவந்த காயல் திரைப்படத்தில் இடம்பெற்ற Sochna Kya பாடலுக்கு மருத்துவர்கள் நடனமாடினர். எது நடக்க வேண்டுமோ அது நடக்கும். ஆனால் அதனை பற்றி கவலைப்படுவதால் ஒன்றும் வரபோவதில்லை என்ற பாடலுக்கு கவச உடையுடன் நடனமாடும் மருத்துவர்களின் வீடியோ வைரலாக காண்போரை நெகிழ செய்தது.
class="twitter-tweet">सोचना क्या, जो भी होगा देखा जायेगा...
वडोदरा के पारुल सेवाश्रम अस्पताल का वीडियो. pic.twitter.com/A1l8p7J2Xl