கொரோனா தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு கவுண்டர் அமைத்து முன்னுரிமை வழங்கும்படி தமிழக அரசுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போடும் முன்னுரிமைப் பட்டியலில் மாற்றுத் திறனாளிகளையும் சேர்க்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தடுப்பூசி மையங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு கவுண்டர் அமைக்கத் தயாராக இருப்பதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தடுப்பூசி போடும் வயது வரம்பை நிர்ணயிப்பது குறித்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் கலந்துபேசி மூன்று நாட்களில் முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.