கொரோனா தடுப்பு மேலாண்மையில் மாநிலங்களுக்கு உதவ மத்திய அரசு 24 மணி நேரமும் செயலாற்றி வருவதாகவும், பிரதமர் மோடி நாள் ஒன்றுக்கு 18 முதல் 19 மணி நேரம் வரை பணியாற்றுவதாகவும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
கொரோனா எதிர்ப்பு போரில் எவ்வித பாரபட்சமும் இன்றி மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசியல் சாயம் பூசுவது ஏற்புடையது அல்ல என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அவர் மறைமுகமாக சாடியுள்ளார். கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள 12 மாநிலங்கள் குறித்த ஆய்வுக்குப் பிறகு, மருத்துவ ரீதியான ஆக்சிஜன் தேவை குறித்து மதிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கு விநியோகிக்க 6,177 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் அதிக அளவாக மகாராஷ்டிரா 1500 மெட்ரிக் டன் பெறும் என்றும் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.