வரும் செப்டம்பர் மாதத்துக்குள் கோவேக்ஸின் தடுப்பூசி உற்பத்தி 10 மடங்கு அதிகரிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமது டுவிட்டரில் பதிவில், சிறிய மாநிலங்களுக்கு 7 நாள்களுக்கு ஒருமுறையும், பெரிய மாநிலங்களுக்கு 4 நாள்களுக்கு ஒருமுறையும் கொரோனா தடுப்பூசிகள் விநியோகிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கீழ் செயல்படும் மருத்துவமனைகளில் பிரத்யேக கொரோனா வார்டுகள், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு கொரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.