நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தேவையைப் பூர்த்தி செய்ய டேங்கர்கள் மூலம் திரவ ஆக்ஸிஜன்களை எடுத்துச் செல்ல ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டினைப் போக்க திரவ ஆக்ஸிஜன்களை ரயில் மூலம் கொண்டு வரும்படி மத்தியப்பிரதேசம் மற்றும் மகாராஷ்டிர அரசுகள் கோரிக்கை விடுத்திருந்தன.
இதையடுத்து ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் டேங்கர்களில் திரவ ஆக்ஸிஜனை நிரப்பி தேவைப்படும் மாநிலங்களுக்கு கொண்டு செல்லும் தொழில்நுட்ப சாத்தியத்தை ரயில்வேத்துறை ஆராய்ந்து வருவதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அடுத்த சில நாட்களில் இதற்கான பூர்வாங்கப் பணிகள் தொடங்க உள்ளதாகவும் அவர், ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.