நாடு முழுவதும் 162 மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை அமைப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘இந்த ஆலைகள் மூலமாக 154.19 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜன் கூடுதலாக உற்பத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 ஆலைகள் ஏற்கெனவே அமைக்கப்பட்டுவிட்டதாகவும், இந்த மாத இறுதிக்குள் மேலும் 54 ஆலைகளும், அடுத்த மாத இறுதிக்குள் கூடுதலாக 80 ஆலைகளும் அரசு மருத்துவமனைகளில் விரைவில் அமைக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆலைகளை அமைப்பதற்கும் பராமரிப்பதற்கும் 201கோடியே 58 லட்சம் ரூபாயை மத்திய அரசு செலவிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.