கடந்த ஆண்டு அரங்கேறிய கேரள நிலச்சரிவு விபத்தில் தனது எஜமானரை பிரிந்து கேரள போலீசாரால் தத்தெடுக்கப்பட்ட வளர்ப்பு நாய் ஒன்று, 8 மாதங்கள் கழித்து மீண்டும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மூணாறு நிலச்சரிவில் சிக்கி 72 பேர் உயிரிழந்தனர். குவி என்ற வளர்ப்பு நாய், நிலச்சரிவில் தனது எஜமானர் குடும்பத்தைப் பறிகொடுத்து, இடுக்கி போலீசாரால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் நிலச்சரிவில் காயங்களுடன் தப்பி மூணாறில் வசிக்கும் குவியின் எஜமானருடைய பாட்டி பழனியம்மாள், குவி தங்களுக்கு வேண்டும் என ஊடகங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று பழனியம்மாளிடம் குவியை போலீசார் ஒப்படைத்தனர்.
8 மாதங்களுக்குப் பிறகு குவியைப் பார்த்த மூதாட்டி அதனை கண்ணீரோடு ஆரத் தழுவிக்கொள்ள, பாசத்துடன் வாலாட்டியவாறே குவியும் அவரிடம் ஒட்டிக்கொண்டது.