ஹரியானா மாநிலம் குருகிராமில், ரெம்டிசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயற்சித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரகசிய தகவலின் அடிப்படையில் மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்திய போது மூன்று பேர் சிக்கியுள்ளனர். அவர்கள் ரயில்வே மருத்துவமனையில் இருந்து விற்பனைக்கு அல்ல என்று முத்திரை பதிக்கப்பட்ட ரெம்டிசிவர் ஊசிகளை கைப்பற்றினர்.
அதே போன்று குஜராத்தில் ரெம்டிசிவர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளச்சந்தையில் இந்த மருந்து சுமார் 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் வரை விற்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.