கும்பமேளாவுக்குச் சென்று திரும்பும் அனைவரும் கொரோனா சோதனை கட்டாயம் எனக் குஜராத் அரசு அறிவித்துள்ளது.
அரித்துவாரில் நடைபெறும் கும்பமேளாவில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததால் கொரோனா பரவல் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில் கும்பமேளாவுக்குச் சென்று திரும்புவோர் நேரடியாக ஊருக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அனைவருக்கும் கொரோனா சோதனை செய்யப்படும் என்றும் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
தொற்றுள்ளது சோதனையில் தெரியவந்தால் 14 நாட்கள் தனிமைப்படுத்தும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.