மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட, ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
மாட்டுத் தீவன ஊழல் தொடர்பான 4 வழக்குகளில், 3ல் அவருக்கு ஏற்கனவே ஜாமீன் கிடைத்துள்ளது. டும்கா கருவூலத்தில் இருந்து 3 கோடியே 13 லட்ச ரூபாயை கையாடல் செய்த 4ஆவது வழக்கில், ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
தற்போது உடல் நலக்குறைவால், நீதிமன்ற வழிகாட்டுதலோடு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் லாலு பிரசாத் யாதவ், விரைவில் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.