மேற்கு வங்கத்தின் 45 தொகுதிகளுக்கு காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
மேற்குவங்கத்தில் எட்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டு அதில் நான்கு கட்ட வாக்குப்பதிவு ஏற்கனவே முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக 45 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது
மொத்தம் 342 வேட்பாளர்கள் இத்தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதுவரை 135 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. எஞ்சிய 159 தொகுதிகளுக்கு இன்று முதல் 29 ஆம் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய தேர்தலில் சுமார் ஒருகோடி பேர் வாக்களிக்க தகுதியுடையவர்களாக உள்ளனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு பதற்றமான வாக்குச்சாவடிகளில் போலீசாருடன் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே ஆறு மாநிலங்களில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் பெல்காம் மக்களவைத் தொகுதிக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.