புதுச்சேரியைச் சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் ஒருவர், மீன்களை தொட்டுத் தடவி நட்பு பாராட்டும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி, சென்னை பகுதிகளில் டெம்பிள் அட்வென்ச்சர் என்கிற பெயரில் ஆழ்கடல் பயிற்சி மையம் நடத்திவரும் அரவிந்த், குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி கடலுக்குச் செல்வதால் தனது உடல் வெப்பத்தையும் வாசத்தையும் வைத்து அடையாளம் கண்டுகொண்ட சில மீன்கள், மற்ற விலங்குகளைப் போலவே தன்னுடன் நட்புடன் பழகுவதாகக் கூறுகிறார். அந்த மீன்களை கட்டியணைப்பது, உடல் மீது தடவிக் கொடுப்பது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார்.