14ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் மோசடி வழக்கில் தொடர்புடைய வைர வணிகர் நீரவ் மோடியை விசாரணைக்காக நாடு கடத்த பிரிட்டன் உள்துறை அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேசனல் வங்கியின் உத்தரவாதக் கடிதத்தின் மூலம் வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகளில் 14ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்த வைர வணிகர் நீரவ் மோடி 2018ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார்.
2019ஆம் ஆண்டு பிரிட்டனில் கைது செய்யப்பட்டார். அவரை விசாரணைக்காக நாடு கடத்துவது தொடர்பான வழக்கில் லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் இந்திய அரசுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்தது.
இந்நிலையில் நீரவ் மோடியை நாடு கடத்துவதற்கு பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பிரீத்தி பட்டேல் ஒப்புதல் அளித்துள்ளார்.