நீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை உண்மைக்கு மாறாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்றங்களில் தற்காலிக நீதிபதிகளை நியமித்து தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்நடைபெற்றது.
வாதங்களுக்கு பின்னர் பேசிய நீதிபதிகள், தற்காலிக நீதிபதிகளுக்கு பணிபாதுகாப்பு எதுவும் இல்லை என்றும் நீதிபதிகள் பணிக்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது மிகவும் முக்கியம் என்றும் தெரிவித்தனர். நீதிபதிகள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் பல உண்மைக்கு மாறானவை என்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.