இந்தியாவின் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துவிட்டது. இந்நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் உயிர்காக்கும் கருவிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
மும்பையில் பல மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பிவிட்டன.சுவாசக் குழாய்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. மும்பை, டெல்லி, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அதிகரிப்பால் குழப்பமான காட்சிகளே காணப்படுகின்றன.
படுக்கைக்காக பல நோயாளிகள் வராண்டாவில் காத்திருக்கும் நிலை உள்ளது. குஜராத் மருத்துவமனைகளில் பிராண வாயு வழங்கும் கருவிகளுக்குக் கட்டுப்பாடு நிலவுகிறது. டெல்லியிலும் நோய்ப் பரவல் அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஆண்டைவிட அதிக பாதிப்புகளும் மரணங்களும் நேரிடலாம் என்று மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்