ஆந்திர மாநிலத்தில் நடைபெற்ற விழாவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் காற்றில் பறக்க விடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
அந்த மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள கிருபாலா கிராமத்தில் உகாதிக்கு மறுநாள் சாணி அடி திருவிழா நடத்துவது வழக்கம். இதே போல இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ஏராளமானவர்கள் இரு பிரிவாக பிரிந்து ஒருவர் மீது, ஒருவர் சாணி உருண்டைகள் வீசி எறிந்தனர்.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்கள் முக கவசம் இன்றி, சமூக இடைவெளி குறித்து கவலைப்படாமல் செயல்பட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.