உத்திரப்பிரதேச தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்பினால், 7 முதல் 14 நாட்களுக்கு வீட்டு தனிமை கட்டாயம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற தொழிலாளர்கள், தாங்கள் பணியாற்றும் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் சொந்த ஊருக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தி கண்காணிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்திரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா அறிகுறி தென்பட்டால் 14 நாட்கள் வீட்டுத் தனிமையும், அறிகுறியற்ற தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தால் 7 நாட்கள் வீட்டுத் தனிமையும், கட்டாயம் என உத்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.