டெல்லியில் கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதால் எரியூட்டும் கூடங்கள், இடுகாடுகளில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. புதனன்று டெல்லியில் கொரோனாவால் 104 பேர் உயிரிழந்தனர்.
டெல்லி நிகம்போத் காட் எரியூட்டும் கூடத்துக்கு வழக்கமாக ஒரு நாளில் 15 உடல்கள் கொண்டுவரப்படும். இப்போது ஒரு நாளில் முப்பதுக்கு மேற்பட்ட உடல்கள் கொண்டுவரப்படுகின்றன.
உடலை எரியூட்ட 5 மணி நேரத்துக்கு மேல் காத்திருக்க வேண்டியுள்ளது. இதேபோல் ஐடிஓ அருகில் உள்ள பெரிய இடுகாட்டில் ஜேசிபி எந்திரம் தொடர்ந்து குழிதோண்டும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
ஒரு நாளில் ஒன்றிரண்டு உடல்கள் கொண்டுவரப்படுவது வழக்கம். இப்போது ஒரு நாளில் 17 உடல்கள் புதைக்கக் கொண்டுவரப்படுகின்றன. இதனால் இன்னும் சில நாட்களில் உடல்களைப் புதைக்க இடமில்லாமல் போகும் என அதன் பராமரிப்பாளர் தெரிவித்துள்ளார்.