ஊரடங்கால் பாதிக்கப்படுவோருக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியை வழங்க ஏதுவாக கொரோனா பெருந்தொற்றைத் தேசியப் பேரிடராக அறிவிக்கும்படி பிரதமர் மோடியிடம் மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே வலியுறுத்தியுள்ளார்.
ஊரடங்கால் பாதிக்கப்படும் பல்வேறு பிரிவினருக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ஐயாயிரத்து 476 கோடி ரூபாய் நிதியுதவியை உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனா பெருந்தொற்றைத் தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தேசியப் பேரிடராக அறிவித்தால் மட்டுமே மாநிலப் பேரிடர் நிவாரண நிதியைப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க முடியும் என்பதையும் அதில் குறிப்பிட்டுள்ளார்.