கொரோனாவின் இரண்டாம் அலை வீசுவதால், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகளை தள்ளிவைக்கலாமா என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அடுத்த மாதம் 4 ஆம் தேதி துவங்க உள்ள இந்த தேர்வுகளை கொரோனா தீவிரமாக பரவுவதால் தள்ளிவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்து விட்டு உள்மதிப்பீட்டு மதிப்பெண்களின் அடிப்படையில் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மோடி அது குறித்து இன்றைய ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.