குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த விதிகள் வகுக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
நாளிதழுக்குப் பேட்டியளித்த அவர், மேற்கு வங்கச் சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள தீர்மானத்தால் தான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் தாமதம் எனக் கூறப்படுவதை மறுத்தார்.
கொரோனா சூழலாலும், அனைத்து எல்லைப்புற மாநிலங்களிலும் பெருமளவில் நடைமுறைகள் உள்ளதாலும் தான் தாமதமாவதாகக் குறிப்பிட்டார். கொரோனா சூழலில் தேர்தலைத் தள்ளிவைக்க அரசியலமைப்புச் சட்டத்தில் எந்த மாற்றுத் திட்டமும் இல்லை என அமித் ஷா தெரிவித்தார்.