மகாராஷ்டிராவில் 144 தடையுத்தரவு அமலுக்கு வந்துள்ளதால் அங்கு பணியாற்றி வந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர்.
அம்மாநிலத்தில் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த இன்று முதல் மே ஒன்றாம் தேதி வரை பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமுடக்கம் இல்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் அத்தியாவசிய பணிகள் தவிர ஏனைய பணிகள் முடங்கியுள்ளன.
இதனால் மகாராஷ்டிராவில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள், லோகமான்ய திலக் ரயில் நிலையத்தில் குவிந்தனர். நீண்ட வரிசையில் இருந்த அவர்கள், பல மணி நேர காத்திருப்புக்குப் பின் புறப்பட்டுச் செல்கின்றனர்.