இந்திய தலைமை தேர்தல் ஆணையராக சுசில் சந்திராவை நியமித்து குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஓய்வு பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை அன்று சுசில் சந்திரா புதிய தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பு ஏற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு மே 14 ஆம் தேதி வரை அவர் இப்பதவியில் இருப்பார். இந்த கால கட்டத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் , மணிப்பூர் மாநில சட்டப்பேரவை தேர்தலை அவர் நடத்த இருக்கிறார்.