அதானி நிறுவனம் வால்மார்ட் நிறுவனத்துக்கு மிகப்பெரிய பண்டகசாலையைக் கட்டிக்கொடுப்பதற்கான உடன்பாட்டில் கையொப்பமிட்டுள்ளது.
அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றி இந்தியாவில் இணையவழிப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது.
வால்மார்ட்டுக்காக மும்பையில் 5 லட்சத்து 34 ஆயிரம் சதுர அடி பரப்புள்ள மிகப்பெரிய பண்டகசாலையைக் கட்டிக் குத்தகைக்கு விட அதானி நிறுவனம் உடன்பட்டுள்ளது.
இந்தப் பெரிய பண்டகசாலை 2022ஆம் ஆண்டு இறுதியில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதேபோல் பிளிப்கார்ட் நிறுவனம் இணையவழிப் பொருள் விற்பனைக்கான தரவு மையத்தைச் சென்னையில் உள்ள அதானி நிறுவனத்தில் அமைக்க உள்ளது.
இதனால் இந்தியாவில் நுகர்பொருள் வணிகத்தில் அமேசான், ரிலையன்ஸ், அதானி - வால்மார்ட் என மும்முனைப் போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது.