உத்தரப்பிரதேச மாநிலம் எட்டாவாவில் பயணிகளை ஏற்றிச் சென்ற டிரக் வாகனம் ஒன்று சக்கர்நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்து 25 அடி ஆழமுள்ள சாலையோர கால்வாய் பள்ளத்தில் விழுந்து உருண்டது.
இந்த கோர விபத்தில் ஒரு பெண் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் 13 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.