கொரோனா பரவல் காரணமாக திருமலை ஏழுமலையான் கோயிலில் இலவச தரிசனம் நாளை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து திருப்பதியில் உள்ள கவுன்ட்டர்களில் நேர ஒதுக்கீடு தரிசன டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணி நாளை முதல் நிறுத்தப்படுகிறது.
விரைவு தரிசன டிக்கெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.