மும்பையில் கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதையடுத்து 70க்கும் மேற்பட்ட அரசு சுகாதார மருத்துவமனைகளில் தடுப்பூசி போடும் மையங்கள் மூடப்பட்டுள்ளன.
மருந்து தட்டுப்பாடு காரணமாக திங்கட்கிழமை வரை தடுப்பூசி மையங்கள் மூடப்படுவதாக அறிவிப்பு பலகைகள் தொங்குகின்றன.திங்கட்கிழமை வரை தடுப்பூசி போட இயலாது என்று மருத்துவமனை வாயில்களில் அறிவிப்பு போடப்பட்டுள்ளது.
ஆயினும் தனியார் மையங்களில் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதனிடையே மத்தியப் பிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் ரெம்டிசிவர் மருந்து கிடைக்காமல் மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும் நீண்ட வரிசைகளில் மக்கள் காத்திருக்கும் நிலை இருந்தது.