சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறக்கப்படுகிறது.
விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை செய்கிறார். நாளை முதல் வருகிற 18-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும் என்றும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் தினமும் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், இதற்கான ஆன்-லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.