லட்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பொருளாதார மண்டலப் பகுதியில் இந்தியாவின் ஒப்புதல் இன்றியே அமெரிக்க கடற்படை பயிற்சி மேற்கொண்டிருப்பது, மத்திய அரசுக்கு அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது.
இந்தியா - அமெரிக்கா இடையிலான ராணுவ உறவு சிறந்த முறையில் இருப்பதுடன், இருதரப்பிலும் ஆண்டுதோறும் போர்பயிற்சிகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. சர்வதேச சட்டப்படி இது வழக்கமாக நடைபெறும் பயிற்சி தான் என்று அமெரிக்க கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
ஏற்கனவே பல முறை இதே போன்று நடத்தப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்திலும் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தரப்பில் இன்னும் கருத்து தெரிவிக்கப்படவில்லை.