நான்கு கோடியே 30 லட்சம் முறை செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்து இருப்பில் உள்ளதாக மத்திய நலவாழ்வுத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரம், சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரம், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் தங்களிடம் தேவையான அளவு கொரோனா தடுப்பு மருந்துகள் இருப்பு இல்லை எனத் தெரிவித்துள்ளன.
இதனால் கொரோனா தடுப்பூசி மையங்களை மூட வேண்டிய நிலை உள்ளதாகவும் கூறியுள்ளன. இதற்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன், கொரோனா தடுப்பு மருந்து தட்டுப்பாடு இல்லை என்றும், 4 கோடியே 30 லட்சம் முறை செலுத்தும் அளவில் கொரோனா தடுப்பு மருந்து கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.