கேரளாவில் விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறக்கப்படுகிறது.
தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 28-ந் தேதி ஆராட்டு திருவிழா நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது. விஷூ பண்டிகையை யொட்டி வரும் 11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் க்யூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.