சத்திஷ்கரில் கடத்திச் சென்ற சிஆர்பிஎப் வீரரை, மாவோயிஸ்ட்டுகள் விடுவித்தனர்.
பிஜப்பூரில் கடந்த 3 ஆம் தேதி இருதரப்பிற்கும் இடையே ஏற்பட்ட மோதலின் போது, கோப்ரா கமாண்டரான ராகேஷ்வர் சிங் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்க வேண்டும் என்று மனைவி மற்றும் மகள் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில் ராகேஷ்வர் சிங்கை, மாவோயிஸ்ட்டுகள் விடுவித்தனர். மீண்டும் சிஆர்பிஎப் முகாமுக்கு அவர் பாதுகாப்பாக வந்து சேர்ந்தார். இது பற்றி அறிந்ததும் அவரது குடும்பத்தினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். விடுவிக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர்.